தமிழ் அரசியல் கைதிகள் மைத்திரிக்குக் கடிதம்!

282 0

prisonersவழக்குகளை துரிதப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட விசேட நீதிமன்றங்கள் மீது விரக்தியுற்ற தமிழ் அரசியல் கைதிகள் சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் கடிதம் எழுதியுள்ளனர்.

31 அரசியல் கைதிகளின் ஒப்பந்தத்தோடு, சிறைச்சாலைகள் ஆணையாளருக்கூடாக அனுப்பப்பட்டுள்ள அந்தக் கடிதத்தின் பிரதி எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன், நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, பிரதம நீதியரசர் ஸ்ரீபவன், சட்ட உதவி ஆணைக்குழுவின் செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில், சாதாரண நீதிமன்றங்களைப் போலவே விசேட நீதிமன்றமும் வழக்கு விசாரணைகளை இழுத்தடிப்பதோடு, மீண்டும் மீண்டும் தவணைகள் போடப்பட்டு காலத்தை இழுத்தடிக்கின்றதே தவிர வழக்குகள் எவையும் முடிவுக்குக் கொண்டுவரப்படவில்லை.

அத்துடன், அரச தரப்பு சாட்சியங்கள் உண்மைக்குப் புறம்பானவையாக இருப்பதுடன், அவை தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி பல காரணங்களால் சிறப்பு நீதிமன்றம் மீது தமிழ் அரசியல் கைதிகளுக்கு விரக்தியேற்பட்டுள்ளதாகவும், அதற்கான காரணத்தையும் அந்த கடிதத்தில் அவர்கள் தெளிவுப்படுத்தியுள்ளதாகவும், அரசியல் கைதிகளை விடுதலை செயவதற்கான தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு நல்லாட்சி அரசாங்கம் துரிதமாக நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும், இல்லாவிட்டால் அவர்கள் மேலும் விரக்தியடைந்து நீதிமன்ற நடவடிக்கைகளை பகிஷ்கரிக்கக்கூடும் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.