வீசா இன்றி தங்கியிருந்த இந்திய பிரஜை கைது

361 0

கல்கிஸ்ஸ பிரதேசத்தில் வீசா இன்றி தங்கியிருந்த இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று  இரவு 10 . 25 மணியளவில் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது நாட்டின் குடிவரவு குடியகல்வு சட்டத்திற்கு புறம்பாக வீசா இன்றி தங்கியிருந்த இந்தியர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் 38 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இவ்வாறு கைது செய்த நபரை பொலிஸார்  நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதுடன் , மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.