காத்தான்குடியில் குற்றத்தடுப்பு பிரிவினரால் ஆறு இளைஞர்களைக் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஆறு பேரும் ஹம்பாந்தோட்டை பகுதியில் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டவர்கள் என குற்றத்தடுப்பு பிரிவினர் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில் குறித்த ஆறு பேரையும் மேலதிக விசாரணைகளுக்காகக் கொழும்பிற்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக குற்றத்தடுப்பு பிரிவினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

