பொலிஸ் மா அதிபரை பதவி விலக்குவது பல நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது!

389 0

பொலிஸ் மா அதிபரை பதவி விலக்குவது பல நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரனசிங்க, பொலிஸ்மா அதிபரின் பிடிவாதம் பல சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேசிய பாதுகாப்பு சபைக்கு பிரதமரும், பாதுகாப்பு அமைச்சரும் கடந்த 06 மாத காலமாக அழைக்கப்படவில்லை என்று குறிப்பிடப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பில்  ஜனாதிபதியின் கவனயீனமும் காணப்படுகின்றது. ஜனாதிபதிக்கும்,  பிரதமருக்கும் இடையில் காணப்படும் போட்டித்தன்மையால்  அனைத்து அரச துறைகளும்  பலவீனமடைந்துள்ளது.

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் இன்று பயனற்றதாகியுள்ளது.    பொலிஸ்மா அதிபரை பதவி  நீக்க முடியாத அளவிற்கு அவரது அதிகாரங்கள் அரசியலமைப்பின் ஊடாக  மிக  சூட்சமமான முறையின்   கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபருக்கு கட்டாய  விடுமுறை வழங்குவதற்கான  நோக்கம் என்ன, பதவியில் இருந்து விலகுவதாக  ஜனாதிபதி  அறிவித்தும் பொலிஸ் மா அதிபர் அவரது கருத்தை பொருட்படுத்தவில்லை. அவ்வாறாயின்,  இந்நிய புலனாய்வு  பிரிவு  தாக்குதல் தொடர்பில் வழங்கிய  தகவல்களை  அவர்  ஜனாதிபதிக்கும்,   பிரதமருக்கும் வழங்கியிருப்பாரா என்ற  சந்தேகம் எழுகின்றது என்றார்.