ஊருபொக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொலொக்கமுவ பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுப்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
ஊருபொக்க -மொலொகமுவ பிரதேசத்தில் புதையல் அகழ்வு இடம்பெறுவதாக நேற்று மாலை 5 மணியளவில் பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக பொலிசார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் 26, 32,47 மற்றும் 54 வயதுடைய கிரிலிபன மற்றும் காலி ஆகிய பிரதேசங்களை சேர்ந்வர்கள் என்றும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இவர்களிடமிருந்து புதையல் அகழ்வுக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் பூஜை பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சந்தேக நபர்கள் வியாழக்கிழமை மொரவக நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டதை அடுத்து அவர்களை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன்,பொலிசார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.


