வடக்கு மாகாண சபை உறுப்பினர் சயந்தனின் கைக்கூலிகளுக்கு 13 மாத சிறைத்தண்டனை!

290 0

courtகொடிகாமம் பிரதேத்தில் வைத்து கிராம அலுவலகரை கடத்திய குற்றச்சாட்டின் பேரில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சயந்தனின் கைக்கூலிகள் மூவருக்கு சாவகச்சேரி நீதிமன்ற நீதிபதி ஐந்து வருடம் ஒத்திவைக்கப்பட்டுள்ள 13 மாதகால சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் குறித்த பெண் கிராம அலுவலகர் தனது சகோதரனுடன் பணிக்குச் செல்லும்போது இனம் தெரியாத நபர்கள் இடைமறித்து சகோதரனைத் தாக்கிவிட்டு குறித்த அலுவலகரை வாகனத்தில் கடத்திச் சென்றனர்.

கடத்தலில் ஈடுபட்ட வாகனம் புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் மடக்கிப் பிடிக்கப்பட்டதுடன், மயக்க நிலையிலிருந்த குறித்த பெண் புதுக்குடியிருப்புப் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வாகனத்திலிருந்து 5 பேரையும் சிறீலங்காக் காவல்துறையினர் கைதுசெய்தனர்.

காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட ஐவருக்கெதிராக சாவகச்சேரி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இவர்களுக்கு ஆதரவாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் சயந்தன் மன்றில் முன்னிலையாகி வாதாடி வந்தார். இந்தவழக்கில் வான் சாரதியும், இன்னுமொருவரும் இந்தச் சம்பவத்துடன் தொடர்பற்றவர்கள் என அவர்களை நீதிமன்றம் விடுதலை செய்தது.

ஏனைய மூவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டு, வழக்குத் தொடர்ச்சியாக நடைபெற்றுவந்த நிலையில் நேற்றையதினம் குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.