ஜீ எஸ் பி பிளஸ் வரிச்சலுகை பெற பிரதமர் பிரசல்ஸ் செல்கிறார்

273 0

ranil-2-ranilஅடுத்தவாரம் மேற்கொள்ளப்படவுள்ள பிரசல்ஸூக்கான விஜயத்தின் போது இலங்கைக்கான ஜீ எஸ் பி பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் பெற்றுக்ககொடுப்பது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற உலக ஏற்றுமதி அபிவிருத்தி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.

ஏற்றுமதி வர்த்தகத்தின் மூலம் இலங்கையின் உற்பத்தித்துறையை மேலும் விரிவுபடுத்தவுள்ளதாக பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.