மலையக தமிழ் சமூகத்தின் போராட்டத்திற்கு தமிழ் சிவில் சமூக அமையம் ஆதரவு

281 0

tamil-civil-amayam-211114-seithyபெருந்தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு நியாயமான வேதனம் வழங்கப்பட வேண்டும் என மலையகத் தமிழ் சமூகம் நடாத்தி வரும் போராட்டத்திற்கு தமிழ் சிவில் சமூக சமயம் தனது முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்கின்றது. 6 நாள் வேலை, நாளொன்றுக்கு 1000 ரூபா ஆகிய கோரிக்கைகள் முழுமையாக சம்பந்தப்பட்ட தரப்பினரால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என நாம் கருதுகிறோம்.

மலையக மக்கள் பல தசாப்தங்களாக அனுபவித்து வரும் பொருளாதார சுரண்டல்களில் இருந்தும் அரசியல் ஒடுக்குமுறையில் இருந்தும் அவர்கள் முழுமையான விடுதலை பெற நாம் முழுமையான ஆதரவை தெரிவித்து நிற்பதோடு எதிர்காலத்தில் இது தொடர்பில் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களும் மலையகத் தமிழ் மக்களும் அவர்களின் அரசியல், சிவில் சமூக அமைப்புக்களும் இணைந்து செயற்பட வேண்டும் என அழைப்பு விடுக்கின்றோம். என  தமிழ் சிவில் சமூக அமைய இணைப் பேச்சாளர்களான  குமாரவடிவேல் குருபரன் மற்றும் எழில் ராஜன் ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.