சமூக வலைத்தளங்களில் தவறான செய்திகளைப் பரப்பினால் சிறைத்தண்டனை !

414 0

நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து சமூக  வலைத்தளங்கள் ஊடாக போலியான தகவல்களை பரப்புவோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு  தெரிவித்துள்ளது.  

இவ்வாறு சமூக  வலைத்தளங்கள் ஊடாக  பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படைகளை தவறாக வழிநடத்தும் நபர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

பேஸ்புக்,  டுவிட்டர், வட்ஸ்அப் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் தவறான தகவல்களை பரப்புபவர்களை அடையாளம் காண்பதற்காக பொலிஸ் மற்றும் பாதுகாப்பு பிரிவுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

 இவ்வாறு  செயற்படும் நபர்களுக்கு  3 வருடங்கள் முதல் 5 வருடங்கள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படும் என   தெரிவிக்கப்பட்டுள்ளது.