119 பொலிஸ் அவசர அழைப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் தாக்குதலுக்கு இலக்காகி கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் மா அதிபர் கட்டளை தகவல் பிரிவின் பணிப்பாளரால் தான் தாக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
நேற்று பகல் 12.30 மணியளவில் மிரிஹானயில் உள்ள பொலிஸ் மா அதிபர் கட்டளை தகவல் பிரிவின் அலுவலகத்தில் இத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அத்தோடு தன் மீதான குற்றச்சாட்டை மறுப்பதாக பொலிஸ் அத்தியட்சகர் அமைத்து குணரத்ன தெரிவித்துள்ளார்.
தான் அவ்வாறு யார் மீதும் தாக்குதல் நடத்தவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
எனினும் பொலிஸ் அத்தியட்சகர் அமித் குணரத்ன தகாத வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்துவது சம்பந்தமாக கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்யப்பட்ட காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.


