அன்னை பூபதியின் நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு

292 0

இந்திய இராணுவத்தினரை நாட்டைவிட்டு வெளியேறுமாறு வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு உயிர்நீத்த அன்னை பூபதியின் நினைவு நாள் நிகழ்வுகள் யாழ். பல்கலைக்கழகத்திலும் அனுஷ்டிக்கப்பட்டது.

அன்னை பூபதியின் நினைவுதினம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூடத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் ளு.பபில்ராஜ் நினைவேந்தல் உரையாற்றினார். கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் இ.கிரிசாந்தன் அன்னை பூபதியின் ஒளிப்படத்திற்கு மலர்மாலை அணிவித்தார்.

அதனைத்தொடர்ந்து மாணவர் ஒன்றியத்தின் பொருளாளர் வு.கௌரிதரன் பொதுச்சுடரை ஏற்ற அதன்பின்னர் மாணவர்கள் அனைவரும் நினைவுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.