பாதாள உலககுழுவின் தலைவர் மாகந்துர மதூஷூடன் டுபாயில் கைது செய்யப்பட்டு பின்னர் நாடு கடத்தப்பட்டிருந்த பியல் புஷ்பகுமார ராஜபக்ஷ விடுவிக்கப்பட்டுள்ளார்.
சுமார் 24 மணி நேரமாக விமான நிலைய குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அவர் இன்று காலை விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
50 வயதான பியல் புஷ்பகுமார ராஜபக்ஷ தெமட்டகொட, ஆராம வீதி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதாள உலககுழுவின் தலைவர் மாகந்துர மதூஷூடன் டுபாயில் கைது செய்யப்பட்ட பியல் புஷ்பகுமார ராஜபக்ஷ மற்றும் மொஹமட் அப்ரிடி மொஹமட் இன்ஹாம் ஆகிய இருவரும் நேற்று அதிகாலை நாடு கடத்தப்பட்டிருந்தனர்.
எவ்வாறாயினும் மொஹமட் அப்ரிடி மொஹமட் இன்ஹாம் என்பவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


