
தனிக்கட்சி ஆட்சியை நிலைநிறுத்துவதற்கான ஒரு சூழ்ச்சித்திட்டத்தின் ஒரு அங்கமாகவே பசில் ராஜபக்ஷ கடந்த ஆட்சிக்காலத்தில் தொகுதி எல்லை நிர்ணய ,அறிக்கையை தயார் செய்திருந்தார்.
அவரின் அந்த செயல் காரணமாகவே எல்லை நிர்ணய செயற்பாடுகளில் முறண்பாடுகள் ஏற்பட்டுள்ளது என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகரத் திட்டமிடல் நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.
எல்லை நிர்ணயத்தில் காணப்படும் பாகுபாடுகளை இல்லாது செய்வதற்காக புதிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த எல்லை மீள் நிர்ணய குழுவினால் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முடியுமே தவிர அதனை திருத்துவதற்கான அதிகாரம் கிடையாது என்றும் அவர் கூறினார்.
“கல்முனை மாநகரம் உள்ளூராட்சியும் சிவில் நிர்வாகமும்” நூல் வெளியீட்டு விழா கல்முனையில் இடம்பெற்றபோது அதில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

