376 சங்குகளுடன் ஒருவர் கைது!

298 0

மன்னார் சிலாவத்துறை பிரதேசத்தில் மன்னார் குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது 376 சங்குகளை தம்வசம் வைத்திருந்த சந்தேகநபரொருவர் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் சிலாவத்துறை பிரதேசத்தைச் சேர்நத 72 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவரிடமிருந்து 50 மில்லி மீற்றரை விடவும் குறைவான நீளமுடைய சங்குகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சிலாவத்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.