மகியங்கனை விபத்தில் கைது செய்யப்பட்ட பஸ் சாரதி பிணையில் விடுதலை

170 0

மகியங்கனை நகரில் இடம்பெற்ற விபத்தின்போது கைது செய்யப்பட்ட தனியார் பஸ்சின் சாரதி மகியங்கனை மஜிஸ்ரேட் நீதிபதி முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போதுநீதிபதி அவரை இரண்டு இலட்ச ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதித்தார்.

மேலும் நீதிபதி அவரை எதிர்வரும் செப்டெம்பர் 5 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டார்.

நேற்று அதிகாலை 1.35 மணியளவில் மகியங்கனை தேசிய கல்லூரிக்கு முன்பாக பதுளை பிரதான வழியில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

 திருகோணமலையிலிருந்து தியத்தலாவைக்கு செல்லும் தனியார் பஸ்சொன்றும் மகியங்கனையிலிருந்து பதுளை வந்து கொண்டிருந்து வேன் ஒன்றுமே நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்த ஆண்கள் நான்கு பேரும்வ் பெண்கள் மூவரும் பிள்ளைகள் மூவருமாக இரு குடும்பத்தைச் சார்ந்த பத்துப்பேர் உயிரிழந்தனர்.

 மேலும் இரு பெண்கள் படுங்காயங்களுடன் மகியங்கனை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர்கள் அங்கிருந்து பதுளை பிரதான அரசினர் வைத்தியசாலைக்கு விசேட சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.

விபத்து குறித்து ஸ்தல விசாரணைகளை மேற்கொண்ட மகியங்கனைப் பொலிசார் விபத்துக்குள்ளான தனியார் பஸ் சாரதியைக் கைது செய்து மகியங்கனை மஜிஸ்ரேட் நீதிபதி முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார்.

நீதிபதி அவரை இரண்டு இலட்ச ரூபா சரீரப்பிணையில் விடுவித்ததுடன்எதிர்வரும் செப்டெம்பர் 5  ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டார்.