ஒழுங்கான தெளிவூட்டல் இன்றி அவதியுறும் மலையக மக்கள் !

306 0

மலையகப் பகுதி மக்களுக்கு தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்கான சரியான தெளிவூட்டல் தேவையென பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

16 வயதிற்கு முன்பே தற்போது தேசிய அடையான அட்டையைப் பெற வேண்டும் என்பது அரசால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆனால் இவ்வாறான சட்டங்கள் பெருந்தோட்ட மக்களுக்கு முறையாக சென்றடைவதில்லை. ஆகவே பலர் அசௌகரியத்திற்கு முகம்கொடுத்து வருவதுடன் தண்டப்பணம் செலுத்தியும் வருகின்றனர்.

மேலும் அவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கையில்,

16 வயது ஆரம்பமான முதல் நாள் விண்ணப்பித்தாலும் அதற்கும் தண்டப்பணம் அறவிடப்படுகிறது என்பது பெருந்தோட்ட மக்களுக்கு அறியாத விடயமாக காணப்படுகின்றது.

ஆகையால் இது தொடர்பான ஒழுங்கான தெளிவூட்டல் வழங்க அரச சார்பான நிறுவனமோ அல்லது தொண்டு நிறுவனங்களோ முன்வரவேண்டும் என மலையக மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.