புத்தளத்தில் கடும் வறட்சி

299 0

புத்தளம் மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக ஒன்பது பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த பகுதிகளில் 9339 குடும்பங்களைச் சேர்ந்த 32564 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் 2041 குடும்பங்களைச் சேர்ந்த 7404 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, ஆராச்சிக்கட்டு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் 1598 குடும்பங்களைச் சேர்ந்த 5719 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு பள்ளம பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் 2823 குடும்பங்களைச் சேர்ந்த 6173 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நவகத்தேகம பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் 148 குடும்பங்களைச் சேர்ந்த 392 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வண்ணாத்திவில்லு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் 65 குடும்பங்களைச் சேர்ந்த 263 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ள அதேவேளை, தங்கொட்டுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் 13 குடும்பங்களைச் சேர்ந்த 52 பேரும் மகாவெவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் 2164 குடும்பங்களைச் சேர்ந்த 8238 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் கருவலகஸ்வெவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் 1137 குடும்பங்களைச் சேர்ந்த 3348 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். நாத்தாண்டி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் 350 குடும்பங்களைச் சேர்ந்த 975 பேர் வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட ஒன்பது பிரதேச செயலாளர் பிரிவுகளில் குடிநீருக்கு அதிக தட்டுப்பாடு நிலவுகின்றது. இதனால் மக்கள் பணம் கொடுத்தே குடிநீரைப் பெற்றுக்கொள்கின்றனர்.

இருந்தபோதிலும் இந்த ஒன்பது பிரதேச செயலகப் பிரிவுகளில் 7013 குடும்பங்களைச் சேர்ந்த 25055 நபர்களுக்கு பவுசர் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மாவட்டத்திலுள்ள பல குளங்கள் குட்டைகளில் நீர் வற்றியுள்ளதினாலும் மேச்சல் நிலங்கள் இல்லாமலும் கால் நடைகள் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக கால்நடை வளர்ப்பாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.