அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி இன்று மேலும் பலமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
இன்று ஒரு அமெரிக்க டொலருக்கான பெறுமதி 174.61 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது. புத்தாண்டு பிறப்பதற்கு முன்னர் ஒரு டொலரின் பெறுமதி 174.66 ரூபாவாக உயர்ந்திருந்தது.
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதியுடன் ஒப்பிடுகையில் ரூபாவானது 4 . 6 சதத்தினால் பலமடைந்துள்ளதாகவும் பொருளியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


