சம்மந்தனை நம்பி வாக்களிப்பது சரியா?

32 0

தமிழ் மக்களின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளும் அரசியல் கட்சிகளோ அல்லது ஜனாதிபதி வேட்பாளர் யாராக இருந்தாலும் அவர்களுக்கே தமிழ் மக்கள் தமது ஆதரவினை வழங்குவார்கள் என ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்திலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை நம்பி மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி அரசிற்கே வடகிழக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரட்ண தெரிவித்த கருத்திற்கு பதிலளிக்கும் வகையிலேயே சுரேஸ் பிரேமசந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.