மகளின் திருமணத்திற்காக பரோல் கேட்டு நளினி வழக்கு- தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

17 0

மகளின் திருமணத்திற்காக 6 மாதம் பரோல் கேட்டு நளினி தாக்கல் செய்த மனுவிற்கு தமிழக அரசு பதிலளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக வேலூர் சிறையில் 27 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும் நளினி, லண்டனில் இருக்கும் தனது மகள் ஹரிதாவின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க 6 மாதங்கள் பரோல் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும், இந்த மனு மீதான விசாரணைக்கு தானே நேரில் ஆஜராகி வாதிட அனுமதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார். 


இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாரயணன் மற்றும் நிர்மல்குமார் அடங்கிய அமர்வு, நேரில் ஆஜராகி வாதிட அனுமதிக் கோரிய மனுவுக்கு ஜூன்11ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. தொடர்ந்து, அவசரமாக பரோல் தேவைப்பட்டால் விடுமுறைகால நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். வழக்கின் அடுத்த விசாரணையை ஜூன் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Post

தமிழகத்தில் பிப்ரவரி 10, 19-ந்தேதிகளில் பிரதமர் மோடி 2 கட்ட பிரசாரம்

Posted by - January 19, 2019 0
தமிழகத்தில் பிப்ரவரி 10, 19-ந்தேதிகளில் பிரதமர் மோடி வருகை தர உள்ளார். சென்னை, மதுரை, கோவை பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். பாராளுமன்ற தேர்தல் நெருங்கி விட்டதால் பிரசார பணிகளில்…

தமிழக மக்கள் நடிகர்களுக்கு ஓட்டுப்போட மாட்டார்கள்: சீமான்

Posted by - October 3, 2017 0
தமிழக மக்கள் சினிமாவை பார்த்து ரசிப்பார்கள், ஆனால் நடிகர்களுக்கு ஓட்டுப்போட மாட்டார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

ஜெயலலிதாவின் இறப்பு குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்: ராமதாஸ்

Posted by - December 30, 2016 0
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக ஐகோர்ட்டு கூறியுள்ளதால் உண்மையை வெளிக்கொண்டு வர சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

மோசமான நிதி நிர்வாகத்தால் தமிழகம் கடனில் தத்தளிக்கிறது: மு.க.ஸ்டாலின் அறிக்கை

Posted by - March 11, 2017 0
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: அதிமுக ஆட்சியில் வரலாறு காணாத வகையில் நிதி மேலாண்மை மிகவும் மோசமாகிவிட்டது.

எடப்பாடி பழனிசாமி கூட்டத்துக்கு 100 நாள் வேலை திட்ட பெண்களை அழைத்து செல்வதா?: மு.க.ஸ்டாலின்

Posted by - October 4, 2017 0
100 நாள் வேலை திட்ட பயனாளிகளை கரூரில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு அழைத்து செல்வது கண்டனத்துக்குரியது என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.