கிறிஸ்தவ மத நிகழ்வு ஒன்றுக்கு யாழ்ப்பாணப் பொலிஸார் தடை!

15 0

யாழ்ப்பாணம் மாநகரசபை மைதானத்தில் நடைபெறவிருந்த கிறிஸ்தவ மத நிகழ்வு ஒன்றுக்கு யாழ்ப்பாணப் பொலிஸார் தடை விதித்துள்ளனர்.

இன்றிலிருந்து தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவிருந்த மத நிகழ்வுக்கே பொலிஸார் இவ்வாறு தடை விதித்துள்ளனர்.

சிவபெருமான் மற்றும் புத்தர் ஆகியோரை குறித்த மத நிகழ்வை ஏற்பாடு செய்யும் குழுவினர் சாத்தான்கள் என்று கூறியதனாலேயே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

இதுதொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் முறைப்பாடு செய்ததையடுத்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

குறித்த முறைப்பாட்டில், சில தினங்களுக்கு முன்னர் கிளி நொச்சியில் குறித்த குழுவினர் மத நிகழ்வொன்றை நடத்தியதாகவும் அதன்போது சிவனையும் புத்தரையும் சாத்தான்கள் என்று கூறியதாகவும் சொல்லப்பட்டுள்ளது. இதற்கான வீடியோ ஆதாரமொன்றும் யாழ் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஏனைய மதத்தவர்களை ஆத்திரமூட்டியுள்ளதாகவும் எனவே இதற்கு யாழ்ப்பாணத்தில் அனுமதி வழங்கப்படக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் குறித்த மத நிகழ்வை முன்னின்று நடத்தும் மூன்றுபேர் இந்தியாவிலிருந்து வருகை தந்தவர்கள் என்று தெரியவருகிறது.

இதேவேளை இந்த நிகழ்வு எதிர்வரும் 29ஆம் நாள் கிழக்கு மாகாணத்திலும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Post

வவுனியா – மன்னார் தனியார் பஸ்ஸில் பயணிக்கும் மக்களின் நிலை

Posted by - April 12, 2019 0
வவுனியாவிலிருந்து மன்னார் நோக்கி பயணிக்கும் தனியார் பஸ்ஸில் கோழிக்குஞ்சுகளை ஏற்றிச்செல்வதினால் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். வவுனியாவிலிருந்து மன்னார் நோக்கி இன்று அதிகாலை மணிக்கு புறப்பட்ட தனியார் …

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை விசாரணைகள் ஒத்திவைப்பு

Posted by - December 12, 2018 0
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சுருக்கமுறையற்ற விசாரணைக்கு அரச சட்டவாதி மன்றில் முன்னிலையாகததால் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று விசாரணைகனை…

கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான விசேட கலந்துரையாடல்

Posted by - July 8, 2017 0
கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்களுக்கான 2017 ஆண்டுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் பெறும் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான விசேட கலந்துரையாடல் 04.07.2017…

முல்லைத்தீவு மல்லாவியில் போதை பாவனைக்கு எதிரான கவனயீர்ப்பு பேரணி!

Posted by - February 21, 2019 0
முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்கு உட்பட்ட மல்லாவி பகுதியில் ஜனாதிபதியின் கிராம சக்தி மக்கள் செயற்திட்டத்தின் கீழ் போதைப்பொருள் ஒழிப்பு கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை…

அத்துமீறி குடியேறிய சிங்களவர்களிற்கு காணி அனுமதிப்பத்திரங்கள்

Posted by - August 22, 2018 0
முல்லைத்தீவு – நாயாறிற்கு தெற்காக உள்ள கொக்கிளாய், கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய் ஆகிய கிராமங்களில் அத்துமீறி குடியேறிய சிங்கள மக்களிற்கு நீதிமன்ற உத்தரவை மீறி மகாவலி அதிகாரசபை காணி…