தேசிய இனப்பிரச்சினை தீர்விற்கு உத்தரவாதம் வழங்குவோருக்கே ஆதரவு-சி.வி

11 0

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் உரிய உத்தரவாதத்தை வழங்குவோருக்கே நாம் ஆதரவளிப்போமென முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் குறித்து தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே சி.வி.விக்னேஸ்வரன் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமிழரின் நீண்டகால பிரச்சினையை தீர்ப்பதற்கு மத்தியஸ்தர் ஒருவரின் ஊடாக உத்தரவாதம் அளித்தால் மாத்திரமே ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து சிந்திக்க முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்க கூடாதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஜனாதிபதி தேர்தல் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் பெரும்பாலான கட்சிகள் அத்தேர்தல் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Post

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு தென்னிலங்கை அமைப்பு ஆதரவு

Posted by - March 14, 2017 0
கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்று 23 வது நாளாகவும் தொடர்கின்ற நிலையில் தென்னிலங்கையில் இருந்து செயற்ப்படுகின்ற அமைப்பான சுதந்திரத்திற்கான மகளீர் அமைப்பு ஆதரவினை வழங்கி…

எம்மை பொறுத்த வரை அனைத்து அரசாங்கமும் ஒன்றுதான். எல்லாம் திருட்டுகும்பல்- மனோ

Posted by - February 16, 2019 0
பாரபட்சங்கள், தள்ளிவைப்புகள் எல்லாம்  புலிகள் காலத்தில்  இருக்கவில்லை. இன்று சமாதானம் வந்திருக்கின்றது என்கிறார்கள். சட்டத்தின் ஆட்சி வந்திருப்பதாக கூறுகின்றார்கள். ஆனால் அன்று இருந்த சமத்துவம் காணமால் போய்விட்டது. …

கிளிநொச்சியில் உள்ள பிரதேச செயலங்களுக்கு உளவுஇயந்திரம் கையளிப்பு

Posted by - April 6, 2017 0
கிளிநொச்சியில் உள்ள பிரதேச செயலங்களுக்கு உளவுஇயந்திரம் கையளிக்கப்பட்டுள்ளது ஜனாதிபதி  செயலகத்தினால் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு கையளிக்கப்பட்ட  நான்கு உளவுஇயந்திரங்களுடன்  கூடிய  நீர்த்தாங்கிகள்  கிளிநொச்சி மாவட்ட  செயககத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது…

பாதுகாப்பு உத்தியோகத்தரை கத்தியால் குத்திய யாழ் இளைஞன் கைது

Posted by - November 14, 2018 0
யாழ். மத்திய பஸ் தரிப்பிடத்தில் நின்ற பாதுகாப்பு உத்தியோகத்தரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியதால், பஸ் நிலைய பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

எந்தவொரு இரகசிய முகாம்களும் இல்லை! – மைத்திரிபால சிறிசேன

Posted by - November 17, 2017 0
காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களுடைய முறைப்பாடுகள், கோரிக்கைகள் மற்றும் தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக மாவட்ட செயலாளர்களூடாக புதிய விண்ணப்பத்தை சமர்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.