அமெரிக்காவில் பரிதாபம்: செல்லப்பிராணியாக வளர்த்த பறவை தாக்கி முதியவர் சாவு!

11 0

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் மார்வின் ஹஜோஸ் (வயது 75). பிராணிகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் தனது வீட்டில் கவர்ச்சிகரமான விலங்குகள் மற்றும் பறவைகளை செல்லப்பிராணிகளாக வளர்த்து வந்தார்.

அந்த வகையில் ஈமு கோழி இனத்தை சார்ந்த கஸ்சோவாரி என்கிற பறவை அவரது வீட்டில் வளர்ந்து வந்தது. இது உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக எடைகொண்ட பறவை இனங்களில் ஒன்றாகும்.
இந்த ரக பறவைகள் அதிகபட்சமாக 45 கிலோ எடையில் இருக்கும். பறக்கும் திறனற்ற இந்த பறவையின் கால் நகங்கள் மற்றும் அலகு மிகவும் கூர்மையானதாக இருக்கும்.
இந்த நிலையில், சம்பவத்தன்று மார்வின் ஹஜோஸ், அந்த பறவைக்கு இரை வைப்பதற்காக சென்றபோது, எதிர்பாராதவிதமாக கால் இடறி கீழே விழுந்தார். அப்போது அவரை அந்த பறவை தனது நகங்களாலும், அலகாலும் பயங்கரமாக தாக்கியது.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காததால் அவர் பரிதாபமாக இறந்தார்.

Related Post

பேர்லின் நகரின் வானூர்தி பணியாளர்கள் பணிபுறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.

Posted by - March 13, 2017 0
ஜெர்மன் பேர்லின் நகரின் வானூர்தி பணியாளர்கள் 25 மணி நேர பணிபுறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர். பேர்லின் நகரின் டோகால் மற்றும் ஸ்கோன்பில்ட் ஆகிய வானூர்தி நிலையங்களைச் சேர்ந்த பணியாளர்களே…

காணாமல் போன 105 வயது கொலைகாரத் திமிங்கலம்

Posted by - January 6, 2017 0
பசிபிக் பெருங்கடல் பகுதியில் வசித்து வந்த சுமார் 105 வயது திமிங்கலம் காணாமல் போய் உள்ளது. அது இறந்து போயிருக்கலாம் என ஆய்வாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

வங்காளதேசம் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா தேர்தலில் போட்டியிட தடை

Posted by - November 28, 2018 0
ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவரும் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா டிசம்பர் 30-ம் தேதி நடைபெறும் பொதுத் தேர்தலில் போட்டியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பார்க் கிளர்ச்சியாளர்கள் யுத்த நிறுத்தில்

Posted by - August 29, 2016 0
கொலம்பிய பார்க் கிளர்ச்சியாளர்கள் யுத்த நிறுத்தம் தொடர்பில் அறிவித்துள்ளனர். கொலம்பிய அரசாங்கத்துடனான சமாதான முனைப்புக்களின் ஓர் கட்டமாக பார்க் கிளர்ச்சியாளர்கள் இவ்வாறு யுத்த நிறுத்தம் தொடர்பில் அறிவித்துள்ளனர்.…

ஒரு சர்வாதிகாரியை ஆட்சியில் அமர்த்த மாட்டோம் – ராகுல்

Posted by - January 31, 2017 0
கோவா மாநில சட்டசபையின் 40 தொகுதிகளுக்கான தேர்தல் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி நடைபெற உள்ளது. ஆளும் கட்சியாக உள்ள பா.ஜ.க. ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள கடும் முயற்சி…