100 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் விடுவித்தது!

16 0

நல்லெண்ண அடிப்படையில் 2–வது முறையாக 100 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் விடுவித்தது .

பாகிஸ்தான் கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக கூறி இந்திய மீனவர்களை பாகிஸ்தான் சிறைபிடித்து ஜெயிலில் அடைத்து உள்ளது. அந்த வகையில் 360 மீனவர்கள் பாகிஸ்தான் சிறைகளில் நீண்டநாட்களாக அடைக்கப்பட்டுள்ளனர்.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஸ்–இ– முகமது பயங்கவரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவப்படையினர் பலியானார்கள். இந்த சம்பவத்தினால் இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவியது.
இந்த பதற்றத்தை தணிக்கும் வகையிலும் நல்லெண்ண அடிப்படையிலும் பாகிஸ்தான் சிறையில் உள்ள 360 இந்திய மீனவர்கள் 4 கட்டமாக விடுவிக்கப்படுவார்கள் என பாகிஸ்தான் அறிவித்தது.
அதன்படி முதல் கட்டமாக கடந்த 7–ந்தேதி 100 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். தற்போது பாகிஸ்தானின் மாலிர் ஜெயிலில் உள்ள 100 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் விடுதலை செய்துள்ளது. அவர்கள் ரெயில் மூலம் லாகூர் கொண்டுவரப்பட்டு வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் 15 -ம் தேதி (திங்கட்கிழமை) ஒப்படைக்கப்படுவார்கள்.


Related Post

அணு ஆயுத சோதனையை கைவிட மாட்டோம்: வடகொரியா அறிவிப்பு

Posted by - April 28, 2017 0
வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகள் ஒருபோதும் நிறுத்தப்படாது என வடகொரிய அரசின் மூத்த அதிகாரி சோல் வோன் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் வேட்பாளரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் – 4 பேர் உயிரிழப்பு!

Posted by - July 13, 2018 0
பாகிஸ்தானில் முத்தாஹிதா இ அமால் கட்சியின் வேட்பாளரை குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர்.

மாலை சூட்டி, திலகமிட்டு நாய்களுக்கு நன்றி – நேபாள மக்களின் நெகிழ்ச்சி தீபாவளி

Posted by - November 7, 2018 0
நேபாள நாட்டு மக்கள் இன்று தங்களது வளர்ப்பு நாய்களுக்கு மாலை சூட்டி, திலகமிட்டு நன்றி பாராட்டி தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். 

நிலக்கரி ஊழல் வழக்கு – தனியார் நிறுவனத்தின் ரூ.101 கோடி சொத்துகள் அமலாக்கத்துறை முடக்கம்

Posted by - July 14, 2018 0
மராட்டியத்தில் நிலக்கரி ஊழல் வழக்கில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.101 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறையினர் முடக்கி உள்ளனர்.

வடகொரியா அணு ஆயுத தாக்குதலை மேற்கொள்ளும் அவதானம்

Posted by - October 7, 2017 0
கிம் ஜாங் உன்-இன் வட கொரிய நிர்வாகம் தனது இறுதி ஆயுதமாக அணு ஆயுத ஏவுகணையை பயன்படுத்தும் அவதானம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர்…