மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

241 0

மொணராகல – வெதிகும்புர பகுதியில் இட்ம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். 

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் குறித்த விபத்த இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் 27 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். 

விபத்தில் காயமடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அதில் ஒருவரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.