ஜேர்மனில் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் சிக்கலில்!

63 0

சிறைப்படுத்தப்பட்டிருந்த இலங்கையின் 15 படைவீரர்களை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட இலங்கை தமிழருக்கு எதிராக ஜேர்மனிய அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

37 வயதான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் சிவதீபன்</a> என்பவருக்கு எதிராகவே இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

போர்க்குற்றம் மற்றும் தீவிரவாத அமைப்பின் உறுப்பினராக இருந்தமை உட்பட அவருக்கு எதிராக மேலும் பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளினால் 15 இராணுவத்தினர் படுகொலை செய்யப்பட்டு, அவர்களின் சடலங்கள் எரிக்கப்பட்டிருந்ததாக ஜேர்மன் அதிகாரிகள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், மற்றுமொரு சந்தர்ப்பத்தில், அவரினால் 13 இராணுவத்தினர் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அதில் இருவர் பலியாகினர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Post

இயக்குநர் கவுதமன் ஜாமீன் மனு தள்ளுபடி – உயர் நீதிமன்றம் அதிரடி!

Posted by - June 29, 2018 0
ஐ.பி.எல் போட்டிக்கு எதிரான போராட்டத்தில் காவலர் தாக்கப்பட்ட வழக்கில் இயக்குநர் கவுதமன்  ஜாமீன் கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. 

யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் பேர்லின் தமிழாலயத்தின் பொங்கல் விழா 2017

Posted by - January 19, 2017 0
பேர்லின் தமிழாலயத்தின் பொங்கல் விழா கடந்த 15 .01 .2017 அன்று மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது .மண்ணுக்காக மரணித்த மாவீரர்களுக்கும் மற்றும் மக்களுக்குமான அகவணக்கத்தை தொடர்ந்து மங்கள…

சர்வதேசத்திற்கு இடமில்லை – ஜனாதிபதி மைத்திரி

Posted by - July 9, 2016 0
தாம் ஜனாதிபதி பதவியில் இருக்கும்வரை சர்வதேச நீதிமன்றங்களுக்கோ நீதிபதிகளுக்கோ நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட இடமளிக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பாணதுறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில்…

ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் என்று உண்மையை மறைத்தோம்: பிரதாப் ரெட்டி

Posted by - December 16, 2017 0
சட்டம் ஒழுங்கு பிரச்சனை வராமல் இருப்பதற்காக ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் என்று உண்மையை மறைத்து அறிக்கை தந்ததாக அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மைத்திரி கையூட்டல் கோரிய செய்தி – மேலதிக தகவல்களை கோரும் ஜனாதிபதி செயலகம்

Posted by - August 28, 2016 0
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கையூட்டல் கோரியதாக வெளியிடப்பட்ட செய்தி தொடர்பில், ஜனாதிபதி செயலகம், மேலதிக தகவல்களை கோரியுள்ளது. குறித்த செய்தியை வெளியிட்ட செய்தியாளர் நிக் மெக்கென்சியிடம் இந்த…