காணி, பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படவேண்டும்!

301 0

download-24காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்கவேண்டுமென்பது தனது தனிப்பட்ட கருத்து என ஜயம்பதி விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் (திங்கட்கிழமை) செய்தியாளர்களுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் தெரிவிக்கையில், அரசியல் மறுசீரமைப்பு தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள வழிநடத்தல் குழுவின் அறிக்கை வெகுவிரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

புதிய அரசியலமைப்பு வரையும் செயற்பாடு தற்போது ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது.

அரசியலமைப்பு சபையினால் நியமிக்கப்பட்ட ஆறு வழிநடத்தல் குழுக்களும், பிரதான விடயங்களான அரசு, இறைமை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி, தேர்தல் முறைமை, மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள் மற்றும் அதிகார பகிர்வு ஆகியன குறித்து தொடர்ந்தும் கலந்துரையாடிவருவதாக அவர் குறிப்பிட்டார்.

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பது தமது தனிப்பட்ட கருத்து எனவும் ஜம்பதி விக்ரமத்ன தெரிவித்தார்.

எனினும் அரசியலமைப்பை மீறும் வகையில் மாகாண சபை செயற்படுமாயின் அது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் மத்திய அரசாங்கத்திற்கு இருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

பொலிஸ் பிரிவிற்கான ஆட்சேர்ப்பு, மாற்றங்கள் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை மாகாண சபை நிர்வாகமே மேற்கொள்ள வேண்டும் என ஜயம்பதி விக்ரமத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொலிஸ் விசாரணைகளில் மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்கள் தலையிடக் கூடாது எனவும் அது குறித்து நீதிமன்றங்கள் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரே அதிகாரங்களை கொண்டிருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.