அனுமதிபத்திரம் இன்றி விற்பனைக்கு வைத்திருந்த மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

288 0

தமிழ் சிங்கள புதுவருடத்தினை முன்னிட்டு அனுமதிபத்திரம் இன்றி விற்பனைக்கு வைக்கபட்டிருந்த மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அனுமதி பத்திரமின்றி தமிழ் சிங்கள புதுவருடத்தினை முன்னிட்டு விற்பனைக்காக வைக்கபட்டிருந்த 50 மதுபான போத்தல்களும் ஹட்டன் குற்றதடுப்பு பொலிஸாரினால் இன்று (12) காலை மீட்கபட்டுள்ளதோடு, சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யபட்டுள்ளதாக ஹட்டன் குற்றதடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். 

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் சென்ஜோன்டிலரி தோட்ட பகுதியில் உள்ள லயன் குடியிருப்பு அறை ஒன்றில் அனுமதி பத்திரமின்றி விற்பனைக்காக வைக்கபட்டிருந்த மதுபான போத்தல்கள் இவ்வாறு மீட்கபட்டுள்ளதாகவும் ஹட்டன் குற்றதடுப்பு பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

ஹட்டன் பொலிஸ் வலையத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் ரவிந்திர அம்பேபிட்டியவின் பணிப்புரைக்கு அமைய ஹட்டன் குற்றதடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிலைப்பின் போதே, இந்த 50 மதுபான போத்தல்களும் மீட்கப்பட்டுள்ளன. 

குறித்த சந்தேக நபருக்கு ஹட்டன் குற்றதடுப்பு பொலிஸாரினால் பிணை வழங்கப்பட்டுள்ளதோடு எதிர்வரும் 16 ஆம் திகதி ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறும் பணிக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் குற்றதடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.