புதையல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது

411 0

பொலன்னறுவ பிரதேசத்தில் புதையல் பெறுவதற்காக அகழ்வில் ஈடுபட்ட பெண் ஒருவர் உள்ளிட்ட இருவர் பொலன்னறுவ தொல்பொருள் பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இருவரும் வாடகைக்கு இருந்த வீட்டில் அகழ்வில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. 

இதன்போது அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

சந்தேக நபர்கள் 21 மற்றும் 31 வயதுடைய கடவத்தை மற்றும் மின்னேரியா பிரதேசங்களை சேர்ந்வர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சந்தேகநபர்கள் இன்று பொலன்னறுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.