பரீட்சைப் பெறுபேறு மீளாய்வு விண்ணப்பப் படிவம் ஏற்பு இன்றுடன் நிறைவு

286 0

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்யும் நடவடிக்கைக்காக விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் இறுதித் தினம் இன்றாகும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கடந்த வருடத்துக்கான பரீட்சைப் பெறுபேறுகள் இவ்வருடம் மார்ச் 28 ஆம் திகதி வெளியாகியது.

மீள்பரிசீலனைக்கான விண்ணப்பப் படிவங்கள் அனுப்பும் பரீட்சார்த்தியின் பெறுபேறுகள், மீள்பரிசீலனைக் குழுவுக்க அனுப்பி பெறுகளை பரிசீலனை செய்யப்படும் எனவும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.