வவுனியாவில் ஹெரோயின் போதைப் பொருள் மீட்பு

357 0

வவுனியா கற்குழிப்பகுதியில் நேற்று மதியம் இளைஞன் ஒருவரை ஹெரோயின் போதைப் பொருட்களுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுரா அபேயவிக்கிரம தலைமையில் கீழ் செயற்படும் புலனாய்வுப்பிரிவுடன் போதை ஒழிப்புப்பிரிவினர் இணைந்து சுற்றிவளைப்பினை மேற்கொண்டுள்ளனர். 

இதன் போது நேற்று மதியம் கற்குழிப்பகுதியில் இளைஞன் ஒருவரிடமிருந்து 510 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப் பொருளினை உடமையில் வைத்திருந்த குற்றத்திற்காக 23வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த சந்தேகநபர்  நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.