குற்றச்சாட்டுகளிலிருந்து சு.க ஒருபோதும் விடுபட முடியாது -கனக ஹேரத்

192 0

மாகாண சபை தேர்தல் காலவரையறையின்றி    பிற்போடப்படமைக்கு  சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய  அரசியல் கட்சிகள் மாத்திரமே பொறுப்பு கூற வேண்டும். தேசிய அரசாங்கத்தில் இடம் பெற்ற முறையற்ற  செயற்பாடுகளில் இருந்து  சுதந்திர கட்சி ஒருபோதும்  விடுபட முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவிற்கும்,   ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும் இடையிலான  பரந்துப்பட்ட கூட்டணியமைத்தல்  தொடர்பான பேச்சுவாரத்தைகள் எதிர்ப்பார்ப்புக்கள் இன்றிய நிலையில் முன்னெடுக்கப்படுகின்றன.

மாகாண சபை தேர்தலை விரைவுப்படுத்த அரசாங்கத்திற்கு   எம்முடன் இணைந்து அழுத்தங்களை பிரயோகிக்க ஒத்துழைப்பு வழங்குவதாக சுதந்திர கட்சியினர் குறிப்பிடுவது  வேடிக்கையானது.

தெற்கு மாகாண சபை உட்பட  08 மாகாண சபைகளின் பதவி காலம் முடிவடைந்துள்ளன.அனைத்து மாகாணங்களுக்கும் ஒரே நாளில் தேர்தலை நடத்துவதாக குறிப்பிட்ட  அரசாங்கம் தேர்லை நடத்துவதற்கான எவ்வித ஏற்பாடுகளையும் முன்னெடுக்காமல் தேர்தலை பிற்போடுவற்கான  வழிமுறைகளை மாத்திரம் ஆராய்கின்றது என அவர் தெரிவித்தார்.