ஜேர்மன் உயர்ஸ்தானிகர் இன்று கிளிநொச்சிக்கு விஜயம்(காணொளி)

383 0

germanஜேர்மன் உயர்ஸ்தானிகர் கிளிநொச்சிக்கு இன்று விஜயம் செய்தார்.

இன்று கிளிநொச்சி ஜேர்மன் தொழிற் பயிற்சி நிறுவனத்திற்கு விஜயம் செய்த இலங்கைக்கான ஜேர்மன் உயர்ஸ்தானிகர் மற்றும் ஜேர்மன் நாட்டு முதலீட்டு நிறுவனமொன்றின் பிரதிநிதிகள் இணைந்து குறித்த தொழிற்பயிற்சி நிறுவனத்தின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து குறித்த தொழிற் பயிற்சி நிறுவனத்தின் கட்டட அமைவிடங்கள், கற்கை நிலையங்கள் என்பவற்றை ஜேர்மன் உயர்ஸ்தானிகர் குழுவினர் பார்வையிட்டதுடன், மாணவர்களிடமும் பயிற்சி நிறுவனத்தின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் இருப்பிட வசதிகள் தொடர்பிலும் கலந்துரையாடினர்.