தனியார் பிரிவு ஊழியர்கள் தொடர்பில் புதிய சட்டம்-விமல் வீரவங்ச

275 0

தனியார் பிரிவு ஊழியர்கள் தொடர்பில் புதிய சட்டம் ஒன்றை விரைவில் பாராளுமன்றத்திற்கு எடுத்துவருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இதேவேளை தனியார் பிரிவு ஊழியர்களுக்காக கொண்டுவரப்பட உள்ள புதிய சட்டத்தின் மூலம் தொழிலாளர் சட்டங்கள் இரத்து செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

அரசாங்கத்தினால் தொழிலாளர்களுக்காக கொண்டுவரப்பட உள்ள புதிய சட்டத்தின் ஊடாக ஊழியர்களின் குறைந்தபட்ச சேவை நேரத்தை 8 மணித்தியாளத்தில் இருந்து 12 மணித்தியாளமாக அதிகரிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அத்துடன் இந்த சட்டத்தின் மூலம் தனியார் பிரிவு ஊழியர்களுக்கு போயா தினத்தில் மாத்திரம் விடுமறை வழங்கப்படும் எனவும் ஏனைய தினங்களில் விடுமுறை வழங்குவதாக இல்லையா என்பது தொடர்பில் நிறுவன உரிமையாளர்களே தீர்மானம் எடுப்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.