இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு புதிய அதிகாரிகள்!

209 0

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 200 அதிகாரிகளை புதிதாக இணைத்துக் கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ய இதனைத் தெரிவித்துள்ளார்.

புதிய அதிகாரிகளை உள்ளீர்ப்பதற்காக நடாத்தப்பட்ட தகுதிகாண் பரீட்சையில் 402 பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தகுதிகாண் பரீட்சையில் தெரிவாகியுள்ளவர்களின் பெயர்ப் பட்டியலை ciaboc.gov.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.