பல்வேறு கண்பார்வை குறைப்பாடுகளை கொண்ட 15 லட்சத்திற்கும் அதிகாமானவர்கள் நாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் பாலித மஹிபால இதனை தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில், தொற்றா நோய் தொடர்பான விழிப்புணர்வும், வருமுன் காப்பு தொடர்பிலும் அறிவின்மையுமே இதற்கான முக்கிய காரணம் எனவும் சுட்டிக்காட்டபட்டுள்ளது.
உலக கண்பார்வை தினத்தை முன்னிட்டு இன்று தேசிய கண் வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சுகாதார சேவைகள் பணிப்பாளர் இதனை தெரிவித்தார்.

