கஞ்சா செடிகளை வளர்த்து வந்து வௌிநாட்டுப் பிரஜை கைது

384 0

த்தேகம இதிகஸ்கெட்டிய இசுறுபுர பிரதேசத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்து வீட்டு பூச்செடிகளில் 13 கஞ்சா செடிகளை வளர்த்து வந்த இங்கிலாந்துப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

எல்பிட்டிய வலய மோசடி தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது. 

குறித்த சந்தேகநபர் கஞ்சா பாவனைக்கு அடிமையாகி இருந்துள்ளதுடன், வீட்டில் இருந்தும் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக செய்தியாளர் கூறினார். 

சந்தேகநபரின் கடவுச்சீட்டை பரிசோதித்த போது செல்லுபடியான விசா இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. 

பத்தேகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.