
Portrait an unknown male doctor holding a stethoscope behind
யாழ்ப்பாணம், நெடுந்தீவில் சேவையாற்றுவதற்காக நிரந்தர வைத்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது.
ஆண்டுதோறும் குறைந்த வைத்தியர்களே வடக்குக்கு நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் விண்ணப்பித்த மாவட்டத்துக்கு ஏற்ப வைத்தியர்கள் நியமனம் செய்யப்படுவர்.
நிரந்தர வைத்தியர்கள் இல்லாத நிலையில் சில மருத்துவமனைகள் இயங்குகின்றன.
நெடுந்தீவில் சேவையாற்றுவதற்கு வைத்தியர்கள் முன்வராத நிலையில் அங்கு நிரந்தர வைத்தியரை நியமிக்க முடியாதிருந்தது. தற்போது அங்கு ஒரு நிரந்தர வைத்தியர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நெடுந்தீவில் நிரந்த வைத்தியர் நியமிக்கப்படாது இருந்தபோது, ஓய்வு பெற்ற வைத்தியர் ஒருவர் ஒப்பந்த அடிப்படையில் சேவையாற்றுவதற்கு நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

