யேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் 29வது அகவை நிறைவு விழா, 30.3.2019-Korchenbourch,Germany

1034 0

யேர்மனியில் தமிழாலயங்களின் ஒருங்கிணைப்பு நடுவமாகிய தமிழ்க் கல்விக் கழகத்தின் 29வது அகவை நிறைவு விழா 30 .3.2019 சனிக்கிழமை யேர்மனி Korchenbourch என்னும் நகரத்தில் வாகை சூடியவரையும் வளப்படுத்தியவரையும் மதிப்பளிக்கும் பெருவிழா எனும் தலைப்பில் மிகச் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வு தொடர்ச்சியாக யேர்மனியில் உள்ள ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ளது.


காலை பத்துமணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந் நிகழ்வில் இந்த மாநிலத்தில் உள்ள தமிழாலயங்கள் பங்குபற்றியிருந்தன. 2018 ஆம் ஆண்டு பொதுத்தேர்விலும், கலைத்தேர்விலும், தமிழ்த்திறன் போட்டியிலும், யேர்மனி முழுவதுமாகத் தேர்ச்சி பெற்ற முதல் மூன்று மாணவர்களுள் இந்த மாநிலத்தில் உள்ள மாணவர்கள் மதிப்பளிக்கப்பட்டனர்.


பிரதமவிருந்தினர்களாக யாழ். பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர் திரு. அருணாசலம் சண்முகதாஸ் அவர்களும், முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் அவர்களும், யேர்மனி கிறிபில்ட் நகரத்தைச் சேர்ந்த அருட்தந்தை அல்பேட் கோலன் அவர்களும், மற்றும் யேர்மனியின் தேசியச் செயற்பாட்டாளர்களும். யேர்மனியில் இருபது வருடங்களுக்கு மேலாக தமிழ்ப்பணியாற்றிய தமிழ் வாரிதிகளும் தமிழ்மானிகளும் கலந்து கொண்டனர். மண்டப வாசலில் இருந்து மாணவர்கள் , ஆசிரியர்கள் , தமிழ்க் கல்விக் கழகத்தின் செயற்பாட்டாளர்கள், ஆகியோர் இவர்களை அழைத்துச் செல்ல மண்டபத்திற்குள் பெற்றோர்களும், பார்வையாளர்களும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர்.


பின்பு மங்கலவிளக்கு ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு தமிழாலய மாணவர்களின் தமிழாலய கீதத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமானது. வரவேற்புரையை தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் திரு. செல்லையா லோகானந்தம் அவர்கள் ஆற்றினார், பின்பு கலைநிகழ்வுகளுடன் மதிப்பளிப்புக்களும் ஆரம்பமாகின. தமிழ்க் கல்விக் கழகத்தின் இளைய செயற்பாட்டாளர்களின் நெறிப்படுத்தலில் தமிழாலயங்களில் உள்ள இளையவர்களையும் இணைத்து இந் நிகழ்வை சிறப்பாக நடாத்தியிருந்தனர்.


மாணவர்களின் மதிப்பளிப்பைத் தொடர்ந்து தமிழாலய ஆசிரியர்கள், நிர்வாகிகள், மதிப்பளிக்கப்பட்டனர். இருபது வருடங்களுக்கு மேலாக தமிழ்ப்பணியாற்றிய ஆசிரியர்களுக்கு தமிழ் வாரிதி என்னும் மதிப்பளிப்பும் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாகப் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு தமிழ்மானி எனும் மதிப்பளிப்பும் வழங்கப்பட்டது.


சென்ற வருடம் யேர்மனி முழுவதிலும் உள்ள தமிழாலயங்களில் பயின்ற 270 மாணவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பை நிறைவு செய்து மதிப்பளிப்புக்கான தகுதியைப் பெற்றிருந்தனர். இவர்களுள் 65 மாணவர்கள் இந்த மேடையில் மிகச்சிறப்பாக மதிப்பளிக்கப்பட்டனர்.

Related Post

காலம் தாண்டியும் ஆறாத காயங்களுடன் யேர்மனியில் நடைபெற்ற ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்ட மக்களின் நினைவேந்தல்

Posted by - December 27, 2016 0
சுனாமி பேரலை அனர்த்தத்தின் 12 ம் ஆண்டு நினைவுநாள் நேற்றைய தினம் பன்னாட்டு ரீதியாக உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டது. ஆழிப்பேரலை காவுகொண்ட அனைத்து உறவுகளையும் நாம் என்றும்…

அவுஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களில் 94 ஈழத் தமிழர்கள் தடுத்து வைப்பு

Posted by - August 4, 2016 0
அவுஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களில் 94 ஈழத் தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மஹிந்தானந்த அளுத்கமகே விளக்கமறியலில் (காணொளி)

Posted by - September 15, 2016 0
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சருமான மஹிந்தானந்த அளுத்கமகேவை எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியிலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதவான்…

காங்கேசன்துறை பகுதியில் மனித எலும்புக்கூடு மீட்பு

Posted by - September 12, 2018 0
யாழ்ப்பாணம், காங்கேசன்துறை பகுதியில் மனித எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை பகுதியில் உள்ள புகையிரத பாதையில் இருந்து சுமார் 50 மீற்றர் தூரத்தில் இருந்து குறித்த மனித…