ஐ.தே.க வுடன் கூட்டிணைய மாட்டோம்-டிலான்

497 0

தேசிய அரசாங்கம் ஒன்றை மீண்டும் அமைப்பதற்காக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டிணையாதென, நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

பதுளை பகுதியில் வைத்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர், எதிர்தரப்பிலிருந்து யாரை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்வது என்பது தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தீர்மானம் எடுக்கவில்லையென, அவர் தெரிவித்தார்.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சி  ஜனாதிபதி வேட்பாளரின்  பெயரை அறிவிக்கும்  வரை, தமது ஜனாதிபதி வேட்பாளரின் பெயரை வெளியிடபோவதில்லையென, நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.