302 பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிக்க கோரிக்கை

277 0

நாட்டில் உள்ள தேசிய பாடசாலைகளில் காணப்படும் 302 பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிரப்ப மூன்று மாத காலக்கெடு கல்வி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பொது சேவைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

உரிய முறைமைகளைப் பின்பற்றாது அதிபர் வெற்றிடங்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு கல்வி அமைச்சினால் பொது சேவைகள் ஆணைக்குழுவிற்கு சமர்பிக்கப்பட்ட அதிபர் பெயர் பட்டியலை பொது சேவைகள் ஆணைக்குழு நிராகரித்ததாக ஆணைக்குழுவைச் சேர்ந்த கல்விச் சேவைக் குழுவின் பேச்சாளர் தெரிவித்தார். 

அத்துடன் தேசிய பாடசாலைகளில் உள்ள அதிபர் பதவி வெற்றிடங்களுக்கு மீள் விளம்பரம் செய்து மூன்று மாத காலத்திற்குள் அதிபர் பதவி வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.