கொலை, பயங்கரவாத நடவடிக்கை, பாரிய மோசடிகள் தொடர்பாக 125 இலங்கையர்களைக் கைது செய்ய சர்வதேச இன்டர்போல் காவல்துறையினர் சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளனர்.
சர்வதேச காவல்துறையான இன்டர்போலினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் 125 பேரில் 118 பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. குறித்த 125 பேரில் 8பேர் பெண்களாவர்.
அத்துடன், போதை வஸ்து வர்த்தகம், கடத்தல் தொடர்பாக 10 பேரை கைது செய்வதற்காக சிறீலங்காக் காவல்துறையினர் இன்டர்போல் காவல்துறையினரின் உதவியை நாடியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

