அவுஸ்ரேலியா மற்றும் இலங்கை படைகள் இணைந்து கூட்டு பயிற்சி

286 0

அவுஸ்ரேலியா மற்றும் இலங்கை படைகள் இணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

மனிதாபிமான உதவி மற்றும் இடர் காப்பு தொடர்பான கூட்டு பயிற்சியிலேயே அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பயிற்சிகள் தொடந்தும் நான்கு நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.

கொழும்புக்கு வந்துள்ள அவுஸ்ரேலிய கடற்படையின் போர்க்கப்பல்களுடன் இணைந்து இலங்கை படையினர் இந்தப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த இடர்முகாமைத்துவ பயிற்சிகளில் இலங்கை அரசசார்பற்ற நிறுவனங்கள், ஐ.நா. அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர். மேலும் இதன்போது இடர் முகாமைத்துவ நிபுணர்கள் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.