தியாக தீபம் அன்னை பூபதியின் 31ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

442 0

தியாக தீபம் அன்னை பூபதியின் 31ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தாயகத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றது.

இதற்கமைய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்திலும் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றது.

இந்த நினைவு நாளின் பத்தாவது நாளான நேற்று நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் திருவுருவப் படத்திற்கு நினைவுச் சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் நினைவுச்சுடர் ஏற்றி வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இந்நிகழ்வில் அக்கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்தியப் படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர் நடைபெற்ற காலத்தில்,  போரை நிறுத்தி பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தி அன்னை பூபதி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.

இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதத்தின் பின்னர் அதாவது 19.04.1988 ஆம் திகதி அவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.