காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளால் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

297 0

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இன்று சனிக்கிழமை கிளிநொச்சியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் கிளிநாச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் முன்பாக ஏ9 வீதியில் இடம்பெற்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை தேடி கிளிநொச்சியில் 769 நாட்களாக சுழற்சி முறையிலான போராட்டத்தினை முன்னெடுத்து வரும் நிலையில் மாதம் தோறும் ஒவ்வொரு  30ஆம்  திகதியும் கவன ஈர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர் அந்தவகையில் இன்றும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது