பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தமது மோட்டார் சைக்கிளில் சூட்சுமமாக எடுத்துச் சென்ற பதப்படுத்தப்பட்ட கஞ்சாப் பொதியை வெள்ளவாயா பொலிசார் கண்டுபிடித்து குறிப்பிட்ட பொலிஸ் உத்தியோகத்தரை கைதுசெய்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
வெள்ளவாயா பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்தே பொலிசார் குறிப்பிட்ட பொலிஸ் உத்தியோகத்தர் செலுத்திய மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி சோதனைகளை மேற்கொண்டனர்.
அவ்வேளையிலேயே சூட்சுமமாக எடுத்துச் செல்லப்பட்ட பதப்படுத்தப்பட்ட கஞ்சா மீட்கப்பட்டது.
இக் கஞ்சா ஒருகிலோவும் அறுநூற்றுமுப்பத்தைந்து கிராமும் இருந்ததாக வெள்ளவாயா பொலிசார் தெரிவித்தனர்,
கைதுசெய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரை மீட்கப்பட்ட கஞ்சாவுடன் மொனராகலை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவாரென்று வெள்ளவாயா பொலிசார் தெரிவித்தனர்.
வெள்ளவாயா பகுதியின் அம்பேகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரே கஞ்சாவுடன் கைதுசெய்யபட்டமை குறிப்பிடத்தக்கது.


