விவசாயிகளுக்கு 3 போகங்களுக்கு நீரை விநியோகிக்க தயார் – சிறிசேன

238 0

விவசாயிகள் தயாராக இருந்தால் 3 போகங்களுக்கு  மொரகாகந்த  நீர்த்தேக்கத்தின் நீரை விநியோகிக்க தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “ மொரகாகந்த  நீர்த்தேக்கத்தின் ஊடாக பொலன்னறுவை மாவட்டத்தில் நிலவிய பாரிய குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

பராக்கிரம சமுத்திரத்தை போன்று இவ்வாறானதொரு பாரிய நீர்தேக்கத்தை அமைப்பதற்கு நாட்டில் உள்ள சிறந்த பொறியியலாளர்கள் உதவியுள்ளனர்.

எனவே,  மொரகாகந்த  நீர்த்தேகத்தின் ஊடாக நீரை பெறும் விவசாயிகள், 3 போகங்கள் விவசாயம் செய்வதற்கு தயாராக இருந்தால், அதற்கு தேவையான அளவு நீர் மொரகாகந்த  நீர்த்தேக்கத்தில் உள்ளது” என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.