ஜெர்மனியில் தீவிரவாதி புகுந்ததாக பீதி

326 0

201610091110538024_german-police-hunt-syrian-born-man-feared-to-be-planning_secvpfஜெர்மனியில் செம்னிட்ஷ் என்ற நகரத்தில் துப்பாக்கியுடன் சிரியாவை சேர்ந்த ஒரு ஐ.எஸ். தீவிரவாதி புகுந்துள்ளதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனால் அந்நகர எல்லைகள் மூடி ‘சீல்’ வைக்கப்பட்டன.

சமீப காலமாக ஐரோப்பிய நாடுகளில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர். பிரான்ஸ், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் வெடிகுண்டு தாக்குதல்கள், துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. ஜெர்மனியிலும் ஒருசில தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.

ஜெர்மனியில் செம்னிட்ஷ் என்ற நகரம் உள்ளது. இங்கு துப்பாக்கியுடன் சிரியாவை சேர்ந்த ஒரு ஐ.எஸ். தீவிரவாதி புகுந்துள்ளதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து இவன் தாக்குதல் நடத்தலாம் என்று கருதி இவனை பிடிக்க தீவிர சோதனை நடத்தப்பட்டது.

இதனால் அந்நகர எல்லைகள் மூடி ‘சீல்’ வைக்கப்பட்டன. ரோடுகளும் மூடப்பட்டன. வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டது