வெப்பம் காரணமாக மயங்கி வீழ்ந்த வயோதிபர் உயிரிழப்பு!

315 0

மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது கடும் வெப்பத்தால் மயங்கி வீழ்ந்த வயோதிபர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணம், தல்லையப்புலம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

யாழ்.தல்லையப்புலம்,  கரவெட்டியைச் சேர்ந்த கார்த்திகேசு இராசதுரை (வயது – 67) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

இன்று பிற்பகல் உறவிர் வீடு ஒன்றிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் வழியில் தல்லையப்புலம் பகுதியில் பிரதான வீதியில் இருந்து  ஒழுங்கை ஒன்றின் இறக்கத்துக்குள் இறங்க முற்பட்ட போது மோட்டார் சைக்கிளிலுடன் மயங்கி வீழ்ந்துள்ளார்.

இதனையடுத்து அவரை அயலில் உள்ளவர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.