ஹெரோயினுடன் நால்வர் கைது

496 0

நாட்டில் பல பகுதிகளில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

வத்தளை, மிரிஸ்ஸ, வெல்லம்பிட்டி மற்றும் கொழும்பு – புளுமெண்டல் ஆகிய பகுதிகளில் வைத்து குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளார்.

குறித்த சந்தேகநபர்களிடமிருந்து சுமார் ஒரு கிலோ 150 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ளவர்களில் இரண்டு பெண்களும் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதி விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.